Templates by BIGtheme NET
Home » சினிமா செய்திகள் » டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா?
TV-Show-referee-Anushka

டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா?

அனுஷ்கா 2005-ல் தெலுங்கில் அறிமுகமாகி பிறகு தமிழுக்கும் வந்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி, பாகமதி என்று தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடித்து திறமையான நடிகை என்றும் நிரூபித்தார். இப்போது அவருக்கு 37 வயது ஆகிறது. உடல் எடையும் கூடிவிட்டது.

இதனால் மூத்த நடிகர்களும், இளம் கதாநாயகர்களும் ஒதுக்குகிறார்கள். திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முயற்சித்தும் பொருத்தமான வரன் அமையவில்லை. வருடத்துக்கு 5, 6 படங்கள் என்று பிசியாக நடித்து வந்த அனுஷ்காவுக்கு இப்போது கைவசம் ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது.

கதாநாயகிக்கு பதிலாக அக்காள், அண்ணி வேடங்களுக்கு அழைப்பதாக தகவல். இதனால் டெலிவிஷனுக்கு மாறும் முடிவில் இருக்கிறார். தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-3 விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் நடத்தினார்கள்.

ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. எனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடத்துவது குறித்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் அனுஷ்காவுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.