Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » டிவிஎஸ் ரேடியான் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை
tvs-business-news

டிவிஎஸ் ரேடியான் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை

டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான் பைக் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) அனிருத்தா ஹல்தார் தெரிவித்துள்ளதாவது:

ரேடியான் 110சிசி பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 7 மாதங்களுக்குள்ளாகவே அதன் விற்பனையானது 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. முதல் தரமான அம்சங்கள், நேர்த்தியான வடிவமைப்பு, சொகுசான பயண அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடையே ரேடியான் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதன் காரணமாகவே, பல்வேறு பிரிவுகளில் அது விருதுகளை வென்றுள்ளது என்று அனிருத்தா தெரிவித்துள்ளார்.