Home » வர்த்தகம் செய்திகள் » டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்துள்ளது
india-coin-reuters

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்துள்ளது

Mumbai:

அந்நிய செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்து ரூ.69.05 ஆக உள்ளது. இந்திய சந்தைகளில் வர்த்தகம் உயர்ந்து தொடங்கியதனால் ரூபாயின் மதிப்புக்கு உறுதுணையாகியுள்ளது. அந்நிய செலாவணி சந்திதை ரூ. 69.11 ஆக தொடங்கியது.

பின் 12 காசுகள் ஆதாயத்தை அடைந்து ரூ.69.05 ஆக உள்ளது. வியாழக்கிழமை இந்திய ரூபாய் 76 காசுகள் குறைந்து 69.17 ஆக முடிவடைந்தது. ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் பணக் கொள்கையில் எந்த வித மாற்றமுமின்றி உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததும், கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட தளர்வும் ரூபாயின் மதிப்பை தக்க வைக்க உதவியுள்ளது.

முதலீட்டுச் சந்தையில் அந்நிய முதலீடு 226.19 கோடி ஆக உள்ளது. ப்ருணட் ஆயில் 0.26 சதவீதம் குறைந்து 69.22 டாலராக உள்ளது.

பிஎஸ்இ சென்செக்ஸ் 195.72 புள்ளிகள் அதிகரித்து 38,880.44 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.26 சதவீதம் அல்லது 62.35 புள்ளிகள் உயர்ந்து 11,660.35 ஆக உள்ளது.