Home » வர்த்தகம் செய்திகள் » டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்தது
2169hfdk_rupee-rs-100_625x300_14

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்தது

Mumbai:

அந்நிய செலவாணியில் இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.86 ஆக உள்ளது. அந்நிய செலவாணி சந்தையில் நேற்று பலவீனமாக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று அதிகரித்துள்ளது.

இந்திய உள்நாட்டு பங்குச் சந்தையில் அந்நிய நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாலும், இந்திய பங்குச் சந்தையின் புள்ளிகள் உயர்ந்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்நிய செலவாணி சந்தையில் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 70.92 ஆகத் தொடக்கத்தில் இருந்து பின் 70.86ஐத் தொட்டது.

புதன் கிழமை நாளின் முடிவில் ரூ71. 12 ஆக முடிவடைந்தது. அந்நிய முதலீடுகள் ரூ130.25கோடிகள் மதிப்பிலான பங்குளை விற்றுள்ளது.

உலகளவில் ப்ருடண்ட் கச்சா எண்ணெய்யின் விலை ரூ. 0.89 சதவீதம் அதிகரித்து பேரல் 62.20 டாலராக உள்ளது.

சென்செக்ஸ் 246.08 புள்ளிகள் அதிகரித்து 35,822.38 ஆக உயர்ந்துள்ளது. நிஃப்டி 53.80 புள்ளிகள் அதிகரித்து 10,705.60 ஆக உயர்ந்துள்ளது.