Templates by BIGtheme NET
automatic_car

சொகுசு பயணத்தை விரும்பும் மக்கள் ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை அபாரம்: 4 ஆண்டுகளில் 28 மடங்கு உயர்வு

புதுடெல்லி: ஆட்டோமேட்டிக் கார்களின் விற்பனை 4 ஆண்டுகளில் 28 மடங்கு உயர்ந்துள்ளது. போக்குவரத்து வசதிக்காக கார் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பத்தினர் கூட கார் வாங்க ஆசைப்படுகின்றனர். இதற்கேற்ப நிறுவனங்களும் புதிய மாடல்களை களம் இறக்கி வருகின்றன. வழக்கமாக கார் வாங்கும்போது எரிபொருள் திறன், விலை, பராமரிப்பு செலவு போன்றவைதான் கருத்தில் கொள்ளப்படும். இதனால் கியர் மாடல்களையே வாங்கி வந்தனர். ஆனால் சமீபகாலமாக ஆட்டோமேட்டிக் கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என்பதை புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
பிரபல நிறுவனம் ஒன்று 2013-14 நிதியாண்டில் 5,400 ஆட்டோமேட்டிக் கார்களை மட்டுமே விற்றது. கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.

இது அந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனையில் ஏறக்குறைய 10 சதவீதம். நடுத்தர மக்களுக்கு ஏற்ப சிறிய ரக கார்களில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர் வசதியுடன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதுபோல் பிற நிறுவனங்களின் ஏஎம்டி கார்களுக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து டீலர்கள் கூறுகையில், கார் வாங்க ஆசைப்படுபவர்கள் முன்பு போல் எரிபொருள் சிக்கனத்தை மட்டும் பார்ப்பதில்லை. அவர்களின் மனநிலை மாறிவருகிறது. நகரங்களில் கார்களின் தேவை அதிகம். நகர பகுதிகளில் நெரிசல் அதிகம். சில இடங்களில் சாலைகள் மோசமாக இருக்கின்றன. இதனால் கியர் மாற்றுவது எரிச்சலூட்டுவதாக உள்ளது. இதனால் ஏஎம்டி மாடல்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். அதோடு, கியர் மாடல்களுக்கும் ஏஎம்டி மாடல்களுக்கும் இடையே எரிபொருள் செலவில் பெரிய வித்தியாசம் கிடையாது. இதுவும் இந்த கார்கள் விற்பனை உயர முக்கிய காரணம். கார் ஓட்டும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் வசதி கருதி ஏஎம்டி கார்களையே தேர்வு செய்கின்றனர் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.