Home » கன்னியாகுமரி செய்திகள் » செல்போன் தருவதாக ஆசை காட்டி பிளஸ்–1 மாணவியை இழுத்து சென்ற பாங்கி ஊழியர்

செல்போன் தருவதாக ஆசை காட்டி பிளஸ்–1 மாணவியை இழுத்து சென்ற பாங்கி ஊழியர்

மாணவியை இழுத்து சென்ற பாங்கி ஊழியர்

மாணவியை இழுத்து சென்ற பாங்கி ஊழியர்

குளச்சல் சேனவிளை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூட்டிய வீடு அருகே பள்ளி சீருடையில் ஒரு மாணவி நின்று கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்றார்.

போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் நைசாக நழுவி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரையும், மாணவியையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசினர். உடனே போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு மாணவியிடம் பெண் போலீசார் விசாரித்தனர்.

அப்போது மாணவி, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், திங்கள் சந்தையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருவதும் தெரிந்தது. அவருடன் இருந்த வாலிபர் கப்பியறையைச் சேர்ந்தவர். நெல்லையில் உள்ள பாங்கியில் பணிபுரிந்து வருகிறார்.

தினமும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, மாணவி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நிற்பதை பார்ப்பார். மாணவி மார்த்தாண்டத்திலிருந்து தினமும் அழகியமண்டபம் வந்து அங்கிருந்து திங்கள்சந்தை செல்வது வழக்கம். அப்போது அந்த வாலிபரும், மாணவியும் சந்தித்து பழகிக் கொண்டனர்.

மாணவியிடம் இருந்த செல்போன் ஒன்று சமீபத்தில் தவறிப்போனது. இதுபற்றி மாணவி அந்த வாலிபரிடம் கூறினார். உடனே அந்த வாலிபர் தன்னுடன் குளச்சலில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்து தங்கினால் செல்போன் வாங்கி தருவதாக ஆசைக் காட்டினார்.

வாலிபரின் பேச்சில் மயங்கிய மாணவி நேற்று அவருடன் குளச்சலுக்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை ஆசைக்காட்டி குளச்சலுக்கு அழைத்து வந்தது பற்றி வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.

மேலும் மாணவியின் பெற்றோருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.