Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » செல்போன் டவர்களை தனி கம்பெனியாக பிரிப்பதை கண்டித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் தர்ணா பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது
BSNL-Employees-Struggle-in-nagercoil-kumari-news

செல்போன் டவர்களை தனி கம்பெனியாக பிரிப்பதை கண்டித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் தர்ணா பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது

நாகர்கோவில், ஏப். 13: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பெரும்பகுதி வருவாயை தற்போது ஈட்டிதருவது செல்போன் டவர்கள். பிஎஸ்எல்எல் நிர்வாகத்தில் 70 ஆயிரம் செல்போன் டவர்கள் உள்ளன. ஏற்கனவே தனியார் செல்போன் நிறுவனங்களின் வருகையால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் மிகவும் சரிந்துவரும், இந்த வேளையில் டவர்களை தனியாக பிரித்து தனிகம்பெனி அமைக்கும் முடிவினால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் இழப்பு அதிகமாக இருக்கும். இதனால் பிஎஸ்என்எல் டவர்களை பிரித்து தனிநிறுவனமாக மாற்றும் முடிவை உடனே கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட் சிங் தலைமை வகித்தார். மாவட்ட ெசயலாளர்கள் ராஜீ, விஜயன், லெட்சுமணபெருமாள், செல்வராஜ் ஆகியோர் தர்ணா போராட்டம் குறித்து பேசினர். தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் ராஜன், சிரில் சேவியர், ஜார்ஜ், ராஜேந்திரன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.