Home » விளையாட்டுச்செய்திகள் » சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி

சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி: மத்திய கலால் வரி அணி வெற்றி


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 58-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 9-2 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் தலிப் ஷா ரஹிம் 5 கோலும், நம்பி கணேஷ், ஹர்மன்பிரீத் சிங் , ஹரிகரன், வினோத் ராயர் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி அணி 7-1 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வீழ்த்தியது. மத்திய கலால் வரி அணியில் பாலாஜி, பிச்சைமணி தலா 2 கோலும், லட்சுமண் கரண், ஹசன் பாஷா, ஜோசுவா தலா ஒரு கோலும் போட்டனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே-எஸ்.டி.ஏ.டி. (பிற்பகல் 2 மணி), சாய்-இந்திய உணவு கழகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65