Home » விளையாட்டுச்செய்திகள் » சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்
International-Volleyball-Trainer-Training-Camp-in-Chennai

சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்

சென்னை,

சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் பயிற்சியாளர் (லெவல் 1) பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மண்டல வளர்ச்சி மைய இயக்குனர் ஏ.ரமணராவ், பயிற்சி முகாம் அறிவுரையாளர் ஜி.இ.ஸ்ரீதரன், தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாக உறுப்பினர் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் ஹாங்காங்கை சேர்ந்த 5 பயிற்சியாளர்கள் உள்பட மொத்தம் 41 பேர் பங்கேற்றுள்ளனர்.