Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன
investor-bse-sensex

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் எனர்ஜி பங்குகள் ஆகியவை சந்தையின் ஆதாயத்திற்கு உதவின.

இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 142.42 புள்ளிகள் அதிகரித்து 39,123.85 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 35.2 புள்ளிகள் அதிகரித்து 11,759.95 புள்ளிகளில் உள்ளது. வங்கி, நிதியியல் சேவைகள் மற்றும் எனர்ஜி பங்குகள் ஆகியவை சந்தையின் ஆதாயத்திற்கு உதவின. ஐடி பங்குகள் பலவீனத்தையே எதிர்கொண்டன.

காலை 9:47 மணியளவில் சென்செக்ஸ் 90.88 புள்ளிகள் அதிகரித்து 39,072.31 ஆக உள்ளது. நிஃப்டி 13.55 புள்ளிகள் அதிகரித்து 11,738.30 புள்ளிகளில் இருந்தது. டாடா மோட்டர்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஓஎன் ஜிசி மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகியவை நிஃப்டியில் முன்னணியில் உள்ளன. 1.25 சதவீதம் முதல் 2.56 சதவீதம் வரை உயர்ந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையண்ட்ஸ் இண்டஸ்ட் ரீஸ் ஆகியவை சென்செக்ஸின் முன்னேற்றத்திற்கு பங்களித்தன. 2018-19ல் இந்தியாவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக குறைந்து வருவதாகவும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மந்தநிலைக்கு காரணிகள் தனிப்பட்ட நுகர்வு, நிலையான முதலீடு அதிகரிப்பு, ஏற்றுமதி குறைவு ஆகியவையாகும். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது. இது பொருளாதாரத்தில் வளர்ச்சி ஊக்கத்தினை வெகுவாக குறைக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.4 சதவீதமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெஞ்ச் மார்க் குறியீட்டு எண் 0.2 சதவிகிதம் குறைந்தது. நியூசிலாந்து பங்குகள் 0.5 சதவீதம் சரிந்தன. தென் கொரியாவின் கொஸ்பி 0.3 சதவிகிதம் குறைந்து விட்டன.