Home » கன்னியாகுமரி செய்திகள் » சுசீந்திரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு

சுசீந்திரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு

சுசீந்திரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு

சுசீந்திரம் அருகே குளத்தில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு

கன்னியாகுமரி, ஜன.6–

சுசீந்திரம் அருகே உள்ள குத்துக்கல் பகுதியில் விவசாய பாசனகுளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால், இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த மீன்களை உணவிற்கு பயன்படுத்துவதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் இன்று அதிகாலை குளத்தில் வலையை விரித்தனர்.

இந்த வலையை அவர்கள் குளத்தில் இருந்து மீட்கும்போது ராட்சத மலைப்பாம்பு சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அந்த வலையை குளத்தில் இருந்து எடுக்க முடியாமல் அவர்கள் திணறினார்கள்.

உடனே, இதுபற்றி அவர்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குமரி மாவட்ட வன அதிகாரி ரிட்டோசிரியாக் உத்தரவின்பேரில் வன ஊழியர் சுந்தரதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வலையில் சிக்கி இருந்த அந்த ராட்சத மலைப்பாம்பை மீட்டார். அந்த பாம்பு 10அடி நீளமும், 25கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. பின்னர்,வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பான காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.