Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » சுங்கான்கடை சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி ஆண்டுவிழா
xavier-college-chunkankadai

சுங்கான்கடை சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி ஆண்டுவிழா

திங்கள்சந்தை, மார்ச் 17: சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி 12வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலை
நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக குழித்துறை மறைமாவட்ட அருட் பணிப் பேரவை துணைத்தலைவரும், தொழிலதிபருமான ஜாண் வர்க்கீஸ் பங்கேற்றார். கல்லூரி நிறுவனர் ஆயர் ஜெரோம் தாஸ் வறுவேல் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரீனா இவான்சி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், “மாணவர்கள் தங்கள் இளமை பருவத்தில் வாழ்க்கையில் எதுவாக வேண்டும், எதை அடைய வேண்டும் என லட்சிய தெளிவு கொள்கிறார்களோ முதுமையில் அதை அனுபவிக்கிறார்கள். இதற்கு மூலதனமாக கடின உழைப்பும், இடைவிடா முயற்சியும், மனத்தெளிவும் அடித்தளமாக அமைகிறது’’ என்றார். தலைமை உரையில் ஆயர் பேசுகையில், “மாறிக்கொண்டிருக்கும் உலகில் இளையோர், மாணவர்களின் வாழ்வு சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த போட்டிகளும், சவால்களும் நிறைந்த உலகில் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி கடினமாக யார் முயற்சிக்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். எனவே மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களாக வாழ, வளர வாழ்த்துகிறேன்’’ என்றார்.

கல்லூரி நிதிக்காப்பாளர் அருட்பணியாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ் நன்றி கூறினார். தொடர்ந்து மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் வில்லியம், மார்னிங் ஸ்டார் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் பிறிமாசிங், காரங்காடு மறைவட்ட முதல்வர் ஜார்ஜ், பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெலஸ்டின் ஜெரால்டு, கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், முன்னாள் தாளாளர் டோமினிக் கடாட்சதாஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பல்கலைக் கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆயர் பரிசு, சான்றிதழ் வழங்கி கௌரவித்து, விழா மலரை வெளியிட்டார். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.