பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » விளையாட்டுச்செய்திகள் » சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்
image 23

சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்

சீரி ஏ சீசன் மீண்டும் தொடங்க முடியுமா என்று மே 28 அன்று இத்தாலிய அரசாங்கம் முடிவு செய்யும் என்று விளையாட்டு அமைச்சர் வின்சென்சோ ஸ்படா போரா செவ்வாயன்று கூறி உள்ளார்.அணிகள் உடனடியாக முழு குழு பயிற்சியையும் தொடங்கலாம் என்று அறிவித்தார்.

மார்ச் 9 முதல் இத்தாலிய கால்பந்து லீக் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு ஜூன் நடுப்பகுதியில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது, ஆனால் இன்னும் அரசாங்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இது குறித்து பேட்டி அளித்த விளையாட்டு அமைச்சர் வின்சென்சோ ஸ்படா போரா சாம்பியன்ஷிப்பை மறுதொடக்கம் செய்வது கொரோனா தொற்று எவ்வாறுஇருக்கிறது என்பதைப் பொறுத்தது. சீரி ஏ கிளப்புகள் ஜூன் 13 அன்று மறுதொடக்கம் செய்ய இந்த மாத தொடக்கத்தில் வாக்களித்தன, ஆனால் பின்னர் விளையாட்டு நிகழ்வுகளுக்கான தடையை ஜூன் 14 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சீரி ஏ லீக் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளேன் எ.ன கூறினார்.

சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என புதிய தேதியை நிர்ணயித்தது இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (எஃப்ஐஜிசி)

எஃப்.ஐ.ஜி.சியின் ஃபெடரல் கவுன்சிலின் ஒரு கூட்டம் இத்தாலிய கால்பந்தின் சிறந்த லீக்குகள் மீண்டும் நடைபெற வேண்டும் வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தியது, ஆனால் அனைத்து அமெச்சூர் போட்டிகளும் நிறுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.