பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கம்
de

சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் இருந்து நீக்கம்

சீன ஊடுருவல்களை ஒப்புக் கொள்ளும் ஆவணம் இந்தியா பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது பின்னர் அது நீக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், எண்ணிக்கை தெரியாத சீன வீரர்களும் கொல்லப்பட்டது குறித்து வெளியான ஆவணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

குக்ராங் நலா, பாங்கோங் ஏரியின் வடக்கு கரை ஆகிய இடங்களில்எ சீன ராணுவம் அத்துமீறியது குறித்து ஆவணம் தெரிவிக்கிறது. லடாக்கில் கடந்த ஜூன் மாதம் நடந்த ராணுவ நடவடிக்கைகளை பற்றி மட்டும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ராணுவம் மற்றும் ராஜீய மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து சுமுக தீர்வு எட்டப்படும் வரை எல்லையில் பதற்றம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைத் தணிக்க இரு தரப்பு ஆயுதப் படைகளுக்கிடையில் தரைமட்ட பேச்சுவார்த்தை நடந்ததாக அந்த ஆவணம் கூறியுள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி ஒரு கார்ப்ஸ் தளபதிகளின் கொடி கூட்டம் நடைபெற்றது. “இருப்பினும், ஜூன் 15 அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஒரு வன்முறை நேருக்கு நேர் சம்பவம் நடந்தது, இதன் விளைவாக இரு தரப்பும் உயிரிழந்தனர் என கூறப்பட்டு உள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய எல்லைக்குள் மே மாத தொடக்கத்தில் சீனா ஊடுருவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது வலைத்தளத்தின் ஆவணத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

இது பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் போடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த பக்கத்தை காணவில்லை.