பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » சீனா குறித்து பிரதமர் மோடி பேசுவாரா?- விவசாயச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள் விவசாயிகளை ஈவு இரக்கமின்றி சுரண்டவே வழி வகுக்கும்: காங்கிரஸ் சரமாரி கேள்வி
578822

சீனா குறித்து பிரதமர் மோடி பேசுவாரா?- விவசாயச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள் விவசாயிகளை ஈவு இரக்கமின்றி சுரண்டவே வழி வகுக்கும்: காங்கிரஸ் சரமாரி கேள்வி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸார் சிலபல கேள்விகளை பிரதமர் மோடியை நோக்கியும், ஆளும் பாஜகவை நோக்கியும் எழுப்பினர்.

லோக்சபா காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகய், இந்தியா-சீனா எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதம் கூட வேண்டாம் பிரதமர் தெளிவுபடுத்துவாரா என்றா.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இது தொடர்பான பிரதமரின் மவுனம் ஏன் என்று கேள்வி எழுப்பினார். கவுரவ் கோகய் கூறும்போது, “பிரதர் சீனா குறித்து பேசுவாரா? விவாதம் வேண்டாம், குறைந்தது தெளிவாவதுபடுத்துவாரா? விவாதம் கேட்கவில்லை. இது குறித்து விளக்கமளிக்க வேண்டாமா, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

மூன்று விவசாய அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதுதொடர்பாக ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைமை ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கவுரவ் கோகய் இது தொடர்பாக பிரச்சினையை எழுப்பிய போது, “இந்த 3 சட்டங்களும் விவசாயிகளை ஈவு இரக்கமின்றி சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கும். விவசாயிகளைக் காக்கும் குறைந்தபட்ச ஆதார விலை என்பதையும் இழக்கச் செய்யும்” என்றார்.

அதே போல் கேள்வி நேரத்தை ரத்து செய்ததை விமர்சனம் செய்த கோகய், “இது இந்திய நாடாளுமன்றத்தின் கவுரவத்தின் மீதான தாக்குதல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உரிமையை பறிப்பது, மக்களுக்கான அரசின் பொறுப்பையும் நீக்குவதாகும்.

எழுத்து மூலம் கருத்துகளை பதிவிடலாம் என்கின்றனர். எழுத்துபூர்வ ஆவணங்களை அதிகாரிகள் எழுதுவார்கள். நாட்டு மக்கள் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கவில்லை. பிரதமரையும், அவரது அமைச்சர்களையும்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றார்