Templates by BIGtheme NET
Bus-accident-in-China-36-dead

சீனாவில் பஸ் விபத்தில் 36 பேர் சாவு

பீஜிங்,

இந்த பஸ் ஷான்சி மாகாணத்தில் உள்ள அதிவேக சுரங்கபாதையில் உள்ளூர் நேரப்படி இரவு 11.34 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சுரங்கபாதையின் சுற்றுச்சுவரில் பஸ் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*