Templates by BIGtheme NET
TTV-Dinakaran-meeting-with-Sasikala

சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சந்திப்பு புதிய கட்சி தொடங்க ஆசி பெற்றதாக பேட்டி

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். மதியம் 1.30 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் 2.45 மணியளவில் சிறையை விட்டு வெளியே வந்தார். இந்த சந்திப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிறையில் எனது சித்தியை (சசிகலா) நேரில் சந்தித்து பேசினேன். நாங்கள் வருகிற 15-ந்தேதி புதிய கட்சியை தொடங்குகிறோம். அதற்கு அவரிடம் வாழ்த்தும், ஆசியும் பெற்றேன்.

காவிரி மேலாண்மை வாரியம்

தேனியில் காட்டுத்தீயில் சிக்கி இளைஞர்கள், பெண்கள் என பலர் மரணம் அடைந்து உள்ளனர். பலர் தீக்காயம் அடைந்துள்ளனர். அங்கு கடந்த 15 நாட்களாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நான் கடந்த 7-ந்தேதி தேனியில் தான் இருந்தேன். அப்போது அங்கு காட்டில் தீ பரவி இருந்தது. இந்த சூழ்நிலையில் அவர்களை வனப்பகுதியில் எப்படி அனுமதித்தனர் என்று தெரியவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதில் தவறு இல்லை.

எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் என்ன பயன் என்று கூறுகிறார்கள். ராஜினாமா மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் ஏற்படும்.

மண்டை ஓடு சின்னம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு ஜெயக்குமார் உள்ளிட்டோர் கட்சி சின்னத்திற்கு எங்கு செல்வார்கள் என்று அப்போது தெரியும். ஜெயக்குமார் எங்களை சட்டி, பானை என்று கிண்டல் செய்கிறார். அவருக்கு மண்டை ஓடு சின்னம் தான் கிடைக்கும். நாங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு நிறைய பேர் கட்சிக்கு வருவார்கள்.

இவ்வாறு டி.டி.வி.தின கரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.