Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டம்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
Farooq-Abdullah-wants-bill-to-award-death-penalty-for-raping

சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்டம்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

கொல்லப்பட்ட சிறுமி எனது மகளை போன்றவள். இன்று நாடே விழித்துக்கொண்டுள்ளது, இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமானதாக மக்கள் கருத தொடங்கிவிட்டனர். நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும். சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக சட்டசபையில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.