Home » விளையாட்டுச்செய்திகள் » சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? அப்ரிடி பதில்
sport1

சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? அப்ரிடி பதில்

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு 2 மணி நேரம் பதில் அளித்தார். அவற்றில் முக்கியமான அம்சம் வருமாறு:-

கேள்வி: உங்களை பொறுத்தவரை சிறந்த கேப்டன் டோனியா (இந்தியா) அல்லது ரிக்கிபாண்டிங்கா (ஆஸ்திரேலியா)?

பதில்: கேப்டன்ஷிப்பில் பாண்டிங்கை விட டோனி சற்று உயர்ந்தவர் என்று மதிப்பிடுகிறேன். ஏனெனில் டோனி இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை சிறந்த முறையில் உருவாக்கியவர்.

கேள்வி: தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர் யார்?

பதில்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ்.

கேள்வி: பிடித்தமான பேட்ஸ்மேன்?

பதில்: வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கேள்வி: இந்திய அணியில் உங்களை கவர்ந்த பேட்ஸ்மேன்?

பதில்: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா.

கேள்வி: உங்களது வயது என்ன?

பதில்: வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே…

இவ்வாறு அப்ரிடி கூறினார்.