Home » கன்னியாகுமரி செய்திகள் » சாலையில் வேருடன் சாய்ந்த மரம்

சாலையில் வேருடன் சாய்ந்த மரம்


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் கடலோர கிராமங்களில் சூறைக்காற்றும் வீசுகிறது. நேற்று மதியம் குளச்சல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் பாலப்பள்ளம் மத்திக்கோட்டில் தனியார் நிலத்தில் நின்ற ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகர் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த பணியை பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னீஸ் முடுக்கி விட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65