Templates by BIGtheme NET

சாமிதோப்பு அருகே வாலிபர் கடத்தி சென்ற 9ம் வகுப்பு மாணவியை மீட்டு தர வேண்டும் எஸ்.பி.யிடம் பெற்றோர் கண்ணீர்

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 14 வயது மகளை கடந்த 8ம் தேதியில் இருந்து காணவில்லை. இவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது வீடு அருகே உறவினர் வீட்டில் ஈரோடு பகுதியை சேர்ந்த ெஜயசிங் என்ற வாலிபர் தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அவர் அடிக்கடி, மாணவியிடம் தங்கை என்ற முறையில் பேசி வருவது வழக்கம். மாணவி காணாமல் போன அன்று ஜெயசிங்கையும் காணவில்லை. இது குறித்து உறவினர்கள் விசாரித்த போது, ஜெயசிங் தான் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி மாயமாகி 4 நாட்கள் வரை ஆகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாத்தை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்து உடனடியாக மீட்க வேண்டும். மகளை கடத்தி சென்ற ஜெயசிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். ஜெயசிங் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் என்பதால் அவர் மாணவியை ஈரோட்டுக்கு கடத்தி சென்று இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி மாணவியை உடனடியாக மீட்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.