பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » சர்வதேச விமானப் பயணத்தில் தளர்வுகளை அறிமுகப்படுத்தும் சவுதி
578732

சர்வதேச விமானப் பயணத்தில் தளர்வுகளை அறிமுகப்படுத்தும் சவுதி

செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானச் சேவையில் தளர்வுகளை அறிமுகப்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த ஆறு மாதங்களாக கரோனா தொற்று காரணமாக சவுதியில் விமானச் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தளர்வுகளை அறிமுகப்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

சவுதிக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், அனைத்து வழிப் போக்குவரத்துகளும் சவுதியில் அனுமதிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது.

3,25,651 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 3,02,870 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.