Home » சினிமா செய்திகள் » சர்கார் பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
Concerns-about-Sarkars-film-affair-Actor-Vijay-Minister

சர்கார் பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

சென்னை,

நடிகர் விஜய் படம் வெளியாவதற்கு முன் ஏதாவது பிரச்சினை கிளம்பும். சென்ற படத்தில் மத்திய அரசை விமர்சித்ததற்காக பெரும் போராட்டம் வெடித்தது, அது படத்திற்கு நல்ல விளம்பரத்தையும் ஈட்டியது. இந்த படத்திலோ, பிரச்சினை வெளியில் இருந்து வரவில்லை. சர்கார் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் பிரச்சினை எழுப்பி, அதில் வெற்றியும் பெற்றார். இந்தக் கதைக்கு வருண் ராஜேந்திரனும் பங்கு அளித்துள்ளார் என்ற அறிவிப்புடன் தான் தொடங்குகிறது சர்கார்.

தற்போது இந்த படத்தில் வரும் சில காட்சிகள் நடப்பு அரசியலை குறிப்பது போல் இருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இதை தொடர்ந்து கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளதாவது:-

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல. சர்கார் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது விஜய்க்கு நல்லதல்ல.

சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது. இல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்சிகள் குறித்து அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. காட்சிகளை படக்குழு நீக்கி விட்டால் நல்லது. அல்லது அடுத்த கட்டநடவடிக்கை குறித்து யோசிப்போம். சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வருடன் விவாதிக்கப்படும் என கூறி உள்ளார்.