Templates by BIGtheme NET
Home » இந்தியா செய்திகள் » சந்தையில் ரூ.2000 நோட்டுகள் மாயாமாவதற்கு பின்னால் ஏதோ சதி சிவராஜ் சிங் சவுகான்
Rs-2000-currency-notes-vanishing-says-Shivraj-Singh

சந்தையில் ரூ.2000 நோட்டுகள் மாயாமாவதற்கு பின்னால் ஏதோ சதி சிவராஜ் சிங் சவுகான்

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாஜ்பூரில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில பாஜக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

பணமதிப்பிழப்புக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்புக்கு பிறகு இதன் மதிப்பு ரூ.16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சந்தையில் காண முடியவில்லை.

இந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கே செல்கிறது? அதனை புழக்கத்தில் விடாமல் யார் வைத்து இருப்பது? பண பற்றாக்குறையை ஏற்படுத்தும் நபர்கள் யார்? பிரச்சனை ஏற்படுத்த இது போன்று சதி செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.