Templates by BIGtheme NET

கோவாவில் பாலம் உடைந்தது; ஆற்றுக்குள் விழுந்து 2 பேர் பலி 30 பேரை காணவில்லை

பனாஜி,

கோவா மாநிலத்தில் கர்சோரம் கிராமத்தில் சன்வோர்டம் ஆற்றின் குறுக்கே போர்ச்சுக்கீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதற்காக, அந்த பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதைக்காண பாலத்தின் மீது ஏராளமானோர் திரண்டனர். இதனால் பாரம் தாங்காமல் திடீரென பாலம் உடைந்தது. அதன் மீது நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் சிலர் நீந்தி கரை சேர, சிலர் மீட்கப்பட்டனர். இருப்பினும், 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். 30 பேரை காணவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*