Templates by BIGtheme NET
governer-paneerval-kanyakumari-tamilnadu

கொல்லங்கோட்டுக்கு தமிழக கவர்னர் வருகை எஸ்.பி. தலைமையில் பாதுகாப்பு

நித்திரவிளை, மார்ச் 12: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா இன்று இரவு 8.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு திருவிழாவை துவக்கி வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் இன்று மாலை திருவனந்தபுரம் வருகிறார். தைக்காடில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து விட்டு இரவு 8 மணியளவில் அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு வருகிறார். கோயில் வரும் கவர்னர் முதலில் அம்மனை தரிசித்து விட்டு, திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகிறார். பின்னர் கார் மூலம் கன்னியாகுமரி சென்று அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் காலை தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

குமரி மாவட்டம் வரும் கவர்னருக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லை பகுதியான பழைய உச்சக்கடை முதல் கோயில் வளாகம் வரையிலும் ஒவ்வொரு சந்திப்புகளிலும் ஒவ்வொரு டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.