பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » கொரோனா தொற்றில் இருந்து அமித்ஷா குணமடைய தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து
nat3

கொரோனா தொற்றில் இருந்து அமித்ஷா குணமடைய தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து

மும்பை,

இந்தியாவை புரட்டி எடுத்துள்ள கொரோனா மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில் எடுத்த பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தனது வலைத்தள பதிவில், “இந்த முழு தேசத்தின் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் உள்ளது. நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என கூறியுள்ளார்.

இதேபோல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்வாரிலால் புரோகித் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.