Home » குமரி செய்திகள் » கொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
06

கொரோனா தடுப்பு பணி 2 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக 2 ஆம்புலன்ஸ் சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்து பேசியதாவது.. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் இதுவரை 15 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது 2 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பயன்பாடு துவக்கப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள வாகனங்களின் வாயிலாக ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 15 ஆம்புலன்ஸ்கள் இருந்தது. தற்போது 17 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. இதில் ஒரு ஆம்புலன்ஸ் பேச்சிப்பாறை பகுதியில் மலையும் மலையை சேர்ந்த பகுதிகளிளுக்கும் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தரமாக வழங்கப்படும். மொத்தம் 7800 கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டும், குணமடைந்தவர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அழைத்து செல்லும் பணியையும் செய்து வருகிறது என கூறினார்