பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
0145

கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் கொரோனா பேரிடர் கால கட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக எங்களது உயிர் மற்றும் குறைந்த ஊதியத்தையும் பொருட்படுத்தாமல் எங்களது நிரந்தர பணிகளை விட்டுவிட்டு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வத்துடன் செவிலியர்கள் ஆக அரசின் கொரோனா நோய் தடுப்பு கவனிப்பு மையத்தில் பணி செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போது கொரோனா தடுப்பு பணிகள் நிறைவடைய போவதாக அறிகிறோம். இதனால் எங்களுக்கு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் முன்னாள் பார்த்த வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே எங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு அல்லது அரசு உதவி பெறும் சுகாதாரம் சார்ந்த பணிகளில் எங்களை நியமிக்குமாறும், கொரோனா தடுப்பு பணியில் கொடுப்பதாக கூறிய சம்பளமும் வழங்கவில்லை. வேலையில் இருந்தும் நிறுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் ஏற்கனவே செய்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய ஊதியம் தரவும், வேலையை நிரந்தர படுத்தவும் உதவி செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது