Home » குமரி செய்திகள் » கொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
image 3

கொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

கொட்டாரத்தில் தந்தை, மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் 29 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை தளவாய்சுந்தரம் வழங்கினார்.

தந்தை-மகளுக்கு கொரோனா

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் படிப்பக தெருவைச்சேர்ந்த 38 வயதான முன்னாள் ராணுவவீரர் தனது 2 மகள்களுடன் சென்னையில் இருந்து குமரிக்கு வந்தார். இதில் அவருக்கும், அவருடைய மூத்த மகளுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் தங்கி இருந்த கொட்டாரம் அச்சன்குளம் சங்கர்படிப்பக தெரு பகுதியை பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுப்புகள் அமைத்து தடை ஏற்படுத்தினர். தடைசெய்யப்பட்ட அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. மேலும் அவரோடு நெருங்கி பழகிய 10 பேரின் சளிமற்றும் ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

நிவாரண பொருட்கள்

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பகுதியான அந்த தெருவில் வசிக்கும் 29 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோஅரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைபொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல்அலுவலர் சத்தியதாஸ், கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரேசன், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெசிம், அ.தி.மு.க. பேரூர் செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், சீனிவாசன், கைலாசம், ராஜபாண்டியன், மனோகரன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள் பஞ்சாயத்து தலைவர்கள் சுடலையாண்டி, இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் லட்சுமி சீனிவாசன், இசக்கிமுத்து, அ.தி.மு.க.நிர்வாகிகள் ராஜேஷ், செல்லம்பிள்ளை, தாணுலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

தடைசெய்யப்பட்ட பகுதியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ஒலிபெருக்கி மூலம் இன்னும் 15 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசு செய்து கொடுக்கும் என்றும் அறிவித்தனர். அப்போது அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், அகஸ்தீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்கீஸ் ராஜா, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம் உள்பட பலர் உடன் இருந்தனர்.