சற்று முன்
Home » இந்தியா செய்திகள் » கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்
Female-Drivers-in-Kerala-Government-DepartmentsCabinet

கேரள அரசு துறைகளில் பெண் டிரைவர்கள்புதிய மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல்

திருவனந்தபுரம்,

கேரள அரசு துறைகள் மற்றும் மாநில அரசு பொதுத்துறைகளில் பெண் டிரைவர்களை நியமிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

பாலின சமத்துவம்

கேரளாவில் ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் பஸ்களில் பெண்களும் டிரைவர்களாக பணிபுரிகின்றனர். ஆனால் அரசு துறைகளில் இதுவரை பெண் டிரைவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் படவில்லை.

எனவே இந்த பாலின பாகுபாட்டை போக்கும் வகையில், அரசு துறை மற்றும் மாநில அரசின் பொதுத்துறைகளில் பெண்களையும் டிரைவராக நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசின் பாலின சமத்துவ கொள்கையின் அடிப்படையில் புதிய மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

அரசு வாகனங்களை ஓட்டலாம்

இந்த புதிய மசோதாவுக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டால், கேரள அரசு வாகனங்களை இனிமேல் பெண்களும் ஓட்ட முடியும்.

இதைத்தவிர குட்டநாடு பிராந்தியத்துக்கு உட்பட்ட 12 பஞ்சாயத்துகளில் வெள்ள நிவாரண சமூகக்கூடங்கள் அமைக்கவும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது. முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த பணிகளை மேற்கொள்ள மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.