Templates by BIGtheme NET
aralvaimozhi-four-road

குழித்துறை பழைய பால பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி

மார்த்தாண்டம், பிப். 14: கேரள மாநிலத்தில் பொது இடங்களில் கழிவுகளை ெகாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கேரள பகுதிகளில் இருந்து லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் கழிவுகளை ஏற்றி குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையோரம் மற்றும் நீர் நிலைகளில் கொட்டி செல்கின்றனர். இதனால், குமரி மாவட்டத்தில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதோடு, நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன.

பணத்திற்காக சிலர் செய்யும் இது போன்ற செயல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மார்த்தாண்டம் வெட்டுவெந்நியை அடுத்த குழித்துறை தாமிரபரணியின் குறுக்கே மிக பழமையான பாலம் ஒன்று உள்ளது. இப்பாலம் பழுதடைந்து, வலுவிழந்து வந்ததால், அருகில் புதிய பாலம் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய பாலம் வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

பழைய பாலம் வழியாக டூ-வீலர்கள் உட்பட சில சிறுரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் அவ்வப்போது செல்வது வழக்கம். இதனால், இப்பகுதி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் காணப்படும். மேலும், இதை சுற்றிய பகுதிகளில் வீடுகளும் அதிகம் இல்லை. இதனை பயன்படுத்தி ஒதுக்குப்புறமான இப்பகுதியில் கழிவுகளை பலர் கொட்டி செல்கின்றனர். இதனால், இறைச்சி கழிவுகள், உயிரிழந்த விலங்குகள், பழைய பொருட்கள் என இப்பகுதியில் மலைபோல கழிவுகள் குவிந்து வருகின்றன. இந்த கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதோடு, அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே குழித்துறை பழைய பால பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கநகராட்சி நட வடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இப்பகுதியில் எச்சரிக்கை போர்டு வைப்பதோடு, மீறி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் ஏற்பட்டு வரும் சுகாதார சீர்கேடுகளை களைய வேண்டும். மேலும், தாமிரபரணி ஆற்றிலும் கழிவுகள் கலக்காமல் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.