Templates by BIGtheme NET

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

நாகர்கோவில், ஜூன் 12: இலவச மற்றும் கட்டாயக்கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் இருந்து வந்த 1986ம் வருட குழந்தைத்தொழிலாளர் சட்டமானது குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டம், 1986 என சட்டத்திருத்தம் செய்யப்பட்டு 01.09.2016 முதல் அமலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியில் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.இச்சட்டத்தினை மீறுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம், அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது 6 மாதம் குறையாமலும் 2 ஆண்டுகளுக்கு மேற்படாமலும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இச்சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கும் தண்டனை வழங்க இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் அல்லது பாதுகாவலருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே, குமரி மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதும், வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் கூடாது என்பதை வலியுறுத்தி தொழிலாளர் நலத்துறை சார்பில் கையெழுத்து இயக்கம், துண்டு பிரசுரம் விநியோகம், வாகன பிரசாரம் ஆகியன நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே கையெழுத்திட்டு, துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.