Home » கன்னியாகுமரி செய்திகள் » குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1½ கோடியில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1½ கோடியில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம்

குளச்சல் மீன்பிடி துறைமுக திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2007-ல் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் துறைமுகத்தில் விசைப்படகுகள் பயன்பெறும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து பனிக்கட்டி உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த நேரம் குளச்சல் மீன்பிடி துறைமுக பனிக்கட்டி உற்பத்தி நிலையத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டம், உதவி பொறியாளர்கள் ஆசிக், அரவிந்த் குமார், நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ், குளச்சல் மீன்வளத்துறை ஆய்வாளர் லிபின்மேரி, குமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடிப்பவர் நல சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.