சற்று முன்
Home » குமரி செய்திகள் » குளச்சல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயாரின் 2-வது கணவர் கைது
13-age-girl-harassment-Mothers-2nd-husband-arrested-in

குளச்சல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயாரின் 2-வது கணவர் கைது

குளச்சல்:

குளச்சல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதிபட்டார். சிறுமியின் உறவினர்கள் சிறுமியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுமியின் கர்ப்பத்துக்கு யார்? காரணம் என்பது தெரியாமல் திகைத்தனர். மேலும் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன்விபரம் வருமாறு;-

சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்பு சிறுமியின் தாயார் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் (வயது 40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரையே 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

தாய், 2-வது திருமணம் செய்ததால் சிறுமி அவரது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். அங்கேயே தங்கி இருந்த சிறுமியை கடந்த மார்ச் மாதம் சிறுமியின் தாயார் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த பின்பு தாயார் இல்லாத நேரத்தில் அவரது 2-வது கணவர் சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பாலியல் பலாத்காரமும் செய்தார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் இச்சம்பவம் தெரியவந்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சிறுமி தாயாரின் 2-வது கணவர் சசிகுமாரை கைது செய்தார்.

அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.