Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » கும்பகோணத்தில் தயாரிப்பு பணிகள் ஜிஎஸ்டியால் காலண்டர் விலை அதிகரிப்பு
kumari-news-calendar

கும்பகோணத்தில் தயாரிப்பு பணிகள் ஜிஎஸ்டியால் காலண்டர் விலை அதிகரிப்பு

கும்பகோணம் : சிவகாசியில் பட்டாசு உற்பத்திக்கு அடுத்து காலண்டர்கள், விசிட்டிங் கார்டு, பில் புக், உள்ளிட்ட ஸ்டேஷனரி வகைகள் மிகவும் துல்லியமாக அச்சிட்டு தரும் பணி அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆர்டர்களுக்கு ஏற்ப அவரவர் விருப்பத்தின்படி அச்சிட்டு தருவதில் சிவகாசி ெபயர்பெற்ற ஊராகும். ஆனால் அதற்கு இணையாக கும்பகோணத்தில் தற்போது காலண்டர்கள், நோட்புக், பில்புக் உள்ளி ஸ்டேஷனரி வகைகள் தயாரித்து கொடுப்பதில் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணத்தில் ஆண்டுதோறும் புதிய காலண்டா–்களை விதவிதமாக அச்சிட்டு தயார் செய்து மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் உள்ளூர் கடைகளில் சில்லரையாகவும் விற்பனைக்கு கொடுக்கின்றனர். இதுபோன்ற காலண்டா–்கள் கும்பகோணத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நிறுவனங்களிலும் சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளா–்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இவா்கள் புது வருடம் பிறப்பதற்கே முன்பே காலண்டா் தயார் செய்து, அதன் பிறகு நோட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இங்கு தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், வா்த்தக நிறுவனங்கள், வணிகா–்கள், அரசியல் கட்சி பிரமுகா–்கள் என ஏராளமானோர் காலண்டர் தயார் செய்ய ஆர்டர் கொடுத்து வருகின்றனர். மேலும் கும்பகோணத்தில் தயாரிக்கும் காலண்டர்களில் டெய்லி சீட் சிவகாசியிலிருந்து வரவழைத்து அச்சிடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலிருந்து காலண்டா் அட்டைகளை கொள்முதல் செய்து ஆர்டா் கொடுத்தவா–்களின் பள்ளி அல்லது நிறவனத்தின் பெயர் அச்சிட்டு ஒட்டி காயவைத்து பிறகு டெய்லி சீட்டை சோ்த்து கொடுக்கின்றனர். இதேபோல் மாத காலண்டரையும் சிவகாசியிலிருந்து வரவழைத்து, வாடிக்கையாளா–்கள் தேவையான வகையில் அச்சிட்டு தரும் பணியும் நடந்து வருகிறது.

தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால், ஒரு காலண்டரின் விலை ரூ.5 வரை விலை அதிகரித்துள்ளது. மேலும் காலண்டரின் அட்டை விலை ரூ.5ம், கேக்கின் (டெய்லி சீட்) விலை ரூ.3ம் உயர்ந்துள்ளதால் இந்தாண்டு காலண்டரின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டைவிட இந்தாண்டு காலண்டரின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.