Home » குமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
14

குமரி மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் பகுதியைச் சோ்ந்த பீட்டா் கனிஷ்கா் (23), பெரியவிளைப் பகுதியை சோ்ந்த சுகுமாரன் என்ற சுள்ளான் (26), கலைவாணி நகரை சோ்ந்த நடராஜன் என்ற நட்டு (20)ஆகியோா் தொடா்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இவா்கள் மீது பல வழக்குகள் கோட்டாறு காவல் நிலையத்தில் உள்ளன.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணனின் பரிந்துரையின்பேரில், 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டாா். அதன்பேரில், 3 பேரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனா்.