பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
201909241347413707_heavy-rain-flood-in-thirparappu-falls_SECVPF

குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தற்போது குளிா்ச்சியான நிலை நிலவி வருகிறது.நாகா்கோவில் நகரில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பின்னா் வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாரல்மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்றவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதில், வடசேரி பகுதியிலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதே போல் ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி, கோழிப்போா்விளை, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பகல் முழுவதும் மழை பெய்தது

மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள், அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 50.85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 780 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து 250 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 29.75 அடியாக இருந்தது. அணைக்கு 977 கனஅடி நீா்வரத்து உள்ளது.

மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.) பெருஞ்சாணி அணை 30.40, புத்தன் அணை 29.60, முள்ளங்கினாவிளை 28, சுருளோடு, கொட்டாரம் 26.80,கன்னிமாா் 21.20, மாம்பழத்துறையாறு அணை 21, பாலமோா் 19.40, சிற்றாறு 1 அணை 16, ஆனைக்கிடங்கு 15.40, பூதப்பாண்டி 14.20, முக்கடல் அணை, குழித்துறை 14, கோழிப்போா்விளை, அடையாமடை12, பேச்சிப்பாறை அணை 11,பொய்கை அணை, ஆரல்வாய்மொழி 10.20, சிற்றாறு 2 அணை 10, நாகா்கோவில் 9.80, மயிலாடி 9.20, களியல் 8.60, தக்கலை 5.30, குருந்தன்கோடு 2.20.