Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

குமரி மாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாண வியர்களுக்கிடையே நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசிய போது கூறியதாவது:- தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போ ட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிர மும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயி ரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், சிறப்பு பரிசாக தலா 2 நபர்களுக்கு ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு ப்போட்டி மற்றும் கட்டு ரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், கலைஞர் பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பேயன்குழி அரசு உயர்நி லைப்பள்ளி மாணவி ஹரிசபரிஷா முதல் பரிசும், நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர் லீனஸ்ஷேரன் 2-ம் பரிசும், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தனா 3-ம் பரிசும், மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீமதி மற்றும் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி பபினாசெர்லின் ஆகி யோருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்துக்கல்லூரி மாணவி ஈஸ்வரபிரியா முதல் பரிசும், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, 2-ம் பரிசும், முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விஜித்ரா மூன்றாம் பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை ப்போட்டியில் மேல்பாலை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி பிறைஸ்னீம் முதல் பரிசும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிரம்ம அக் ஷயா 2-ம் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவபிரியா, 3-ம் இடத்தை பெற்றார்கள். பேச்சுப்போட்டிகளில் நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஷ்மி முதல் பரிசும், ஆளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுகைனா பாத்திமா 2-ம் இடத்தையும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகஸ்தியா மூன்றாம் பரிசும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நடைபெற்ற போட்டி களில் பரிசு பெற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுக்களை தெரி வித்துக்கொள்வதோடு, இதுபோன்று மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நிக ழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பி ரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெ க்டர் (ச.பா.தி) திருப்பதி, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.