Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » குமரி மருத்துவக்கல்லூரியில் 1,188 விண்ணப்பம் விநியோகம்
1,188-application-in-Kumari-Medical-College

குமரி மருத்துவக்கல்லூரியில் 1,188 விண்ணப்பம் விநியோகம்

நாகர்கோவில், ஜூன் 13: தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம், நேற்று முன்தினம் (11ம் தேதி) தொடங்கியது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கூட்ட நெரிசலை தவிர்க்க கல்லூரி கலையரங்கில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வாங்க தனி கவுண்டரும், சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வாங்க தனி கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 18.6.2018 மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும்.முதல் நாளான நேற்று முன்தினம் அரசு கல்லூரிகள் மற்றும் சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு பொதுப்பிரிவில் 530 விண்ணப்பங்களும், எஸ்.சி.எஸ்.டி. பிரிவில் 82 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டு இருந்தன. சுய நிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 299 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தன.

நேற்று 2வது நாளும் ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். நேற்று சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 115 விண்ணப்பங்களும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவில் 6 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. சுய நிதி கல்லூரிகளுக்கு 156 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருந்தன. 2 நாட்களில் மொத்தம் 1,188 (எஸ்.சி.எஸ்.டி. உள்பட) விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.