Templates by BIGtheme NET
tnpsc-group4-exam-in-kanyakumari

குமரியில் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்: குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கிளை கருவூலத்துக்கு சென்றன

நாகர்கோவில், பிப்.10 : துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன், குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் கிளை கருவூலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உட்பட 8 வகையான பதவியிடங்களில் 9,351 காலி இடங்களை நிரப்ப நாளை (11ம்தேதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494, இளநிலை உதவியாளர் 4,301, தட்டச்சர் 3,463 காலியிடங்கள் இத்தேர்வுக்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

தேர்வை மாநிலம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். முதல் முறையாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் சேர்த்து குரூப் 4 தேர்வு நடத்தப்படுவதால் தேர்வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 263 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, தோவாளை, தக்கலை ஆகிய இடங்களில் உள்ள 104 மையங்களில் மொத்தம் 174 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகான வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வாகனம் ஒன்றும் 24 மணி நேரமும் கருவூலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட கருவூலகத்தில் இருந்து, அந்தந்த கிளை கருவூலங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் இவை டெம்போக்களில் கொண்டு செல்லப்பட்டன. 5 கிளை அலுவலகங்களில் இவை போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.