பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்
02

குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்

குமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை குறைந்ததையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டது.குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. புதன்கிழமை இரவு தொடங்கிய மழை இடைவிடாது பெய்தது. தொடா்ந்து அணைகளின் நீா்வரத்துப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேல் கோதையாறு, கீழ்கோதையாறு பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்வரத்துப் பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால், அந்த அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.மேலும், பாசனப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளதால், பாசனப் பகுதிகளில் தண்ணீா் தேவை குறைந்ததையடுத்து பெருஞ்சாணி அணை வியாழக்கிழமை மாலையில் மூடப்பட்டது.

பேச்சிப்பாறை, திற்பரப்பு, குலசேகரம், அருமனை, சுருளகோடு உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீா் 682 கன அடியிலிருந்து 382 கன அடியாக குறைக்கப்பட்டது. சிற்றாறு அணையிலிருந்தும் திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு 100 கன அடியாக குறைக்கப்பட்டது.பலத்த காற்று காரணமாக சில இடங்களில் வாழைகள் சாய்ந்தன. சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுந்ததையடுத்து மின் தடை ஏற்பட்டது.மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. பொது முடக்கம் காரணமாக அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.