Home » குமரி செய்திகள் » குமரியில் பரவலாக மழை
02

குமரியில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை- 15.8, பெருஞ்சாணி- 13.6, புத்தன்அணை- 12, சிற்றார் 1-18, சிற்றார் 2-17.2, மாம்பழத்துறையாறு- 15, முக்கடல்- 10, பூதப்பாண்டி- 11.2, களியல்- 4.3, கன்னிமார்- 17.2, கொட்டாரம்- 14.8, குழித்துறை- 7, மயிலாடி- 14.4, நாகர்கோவில்- 13, சுருளக்கோடு- 11.4, தக்கலை- 1.2, குளச்சல்- 18.6, இரணியல்- 8.2, பாலமோர்- 22.4, ஆரல்வாய்மொழி- 8.4, கோழிப்போர்விளை- 15, அடையாமடை- 4, குருந்தங்கோடு- 12.8, முள்ளங்கினாவிளை- 13, ஆனைக்கிடங்கு- 13.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இந்த மழையால் நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 580 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 330 கன அடியும் தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.