Templates by BIGtheme NET
kumari-collector-chawan

குமரியில் நாளை 4 இடங்களில் அம்மா திட்ட முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழக அரசால் தோற்று விக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் நான்காம் கட்ட சிறப்பு முகாம்கள் நாளை (13ம் தேதி) வெள்ளிக்கிழமை குமரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் நடைபெறவுள்ளது. அஞ்சுகிராமம் வருவாய் கிராமத்திற்கு மட்டும், வாரியூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், குமாரபுரம் வருவாய் கிராமத்திற்கு குமாரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பேச்சிப்பாறை வருவாய் கிராமத்திற்கு பேச்சிப்பாறை, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும், கீழ் மிடாலம் “ஏ” வருவாய் கிராமத்திற்கு மட்டும் ஆலஞ்சி புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் வைத்தும் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

முகாம்களில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குட்பட்ட நில தாவாக்கள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*