Home » இந்தியா செய்திகள் » குஜராத்தில் டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு
7-dead-and-10-injured-after-an-auto-collided-with-a-truck

குஜராத்தில் டிராக்டர் மீது ஆட்டோ மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு

கட்ச் மாவட்டம் மங்குவா பகுதியில் ஆட்டோ ஒன்று டிராக்டர் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் ஆட்டோ உருக்குலைந்தது. அதிலிருந்த பயணிகள் அலறியவாறு சரிந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.