Home » குமரி செய்திகள் » ‘கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு’
05

‘கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு’

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்திகோடு, முள்ளங்கினாவிளை, மிடாலம் – இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த கிராம சாலைகளை சீரமைக்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் மிகவும் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து,

கிள்ளியூா், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், மத்திகோடு ஊராட்சி மற்றும் முள்ளங்கினாவிளை ஊராட்சி, மிடாலம் ,இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஊராட்சி பகுதிகளில் மிகவும் பழுதடைந்த 4 சாலைகளை சீரமைக்க கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திகோடு ஊராட்சியில் வெள்ளியாவிளை நல்லாயன் ஆலயம் – முளமூட்டுவிளாகம் சாலை ரூ.1.6 கோடி, 6 மிடாலம் – இனையம்புத்தன்துறை ஊராட்சிகளில் கைதவிளாகம் – மேல்மிடாலம் – இனையம் சாலை ரூ.1.38 கோடி, முள்ளங்கினாவிளை ஊராட்சியில் முள்ளங்கினாவிளை- இடையன் கோட்டை சாலை ரூ. 1.30 கோடி, குளப்புறம் ஊராட்சியில் திட்டங்கினாவிளை- குளப்புறம் சாலை ரூ.1.6 கோடி என மேற்கண்ட 5 ஊராட்சிகளில் மொத்தம் ரூ. 4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.