Templates by BIGtheme NET
Sreesanth-is-on-the-Board-of-Cricket

கிரிக்கெட் வாரியம் மீது ஸ்ரீசாந்த் சாடல்

திருவனந்தபுரம்,

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட்பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் கைது செய்ததை தொடர்ந்து அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க வேண்டும் என்று சமீபத்தில் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் கோபம் அடைந்து இருக்கும் ஸ்ரீசாந்த் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நான் பிச்சை கேட்கவில்லை. எனது வாழ்வாதாரத்தை மீண்டும் எனக்கு தாருங்கள் என்று தான் கேட்கிறேன். அது எனது உரிமையாகும். நீங்கள் ஒன்றும் கடவுளுக்கு மேலானவர்கள் கிடையாது. நான் மீண்டும் விளையாடுவேன். நான் அப்பாவி என்று மீண்டும், மீண்டும் நிரூபித்த பின்னரும் இந்திய கிரிக்கெட் வாரியம் தடையை நீக்க மறுப்பது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை. ஊழல் மற்றும் சூதாட்டத்தை ஒருபோதும் சகித்து கொள்ளமாட்டோம் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது என்றால் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விஷயத்தில் என்ன செய்தீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*