பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » குமரி செய்திகள் » காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.2500
565575

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.2500

கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் வெண்டை, கத்தரி, கீரை, கொடி வகை காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்த பின்னர் விதைகள் கொள்முதல் செய்த விலைப்பட்டியல், கிராம நிர்வாக அலுவலர் அளித்த அடங்கல், பயனாளி புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். திட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தெரிவித்துள்ளார்.