Templates by BIGtheme NET
cheque_book

காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: காசோலை நடைமுறையை ஒழிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காசோலை நடைமுறை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காசோலை நடைமுறையை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது.

வியாபார, வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு காசோலை முதுகெலும்பாக உள்ளது. ரொக்க பரிவர்த்தனை குறைவாக உள்ள பொருளாதாரத்தை ஏற்படுத்துவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. காசோலைகள் மின்னணு பரிவர்த்தனையின் ஓர் அங்கமாக இருக்கின்றன. எனவே ஒரு போதும் காசோலை நடைமுறை ஒழிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சகம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*