Templates by BIGtheme NET
Telangana-Congress-MLAs-11-persons-suspended

கவர்னர் மீது ‘ஹெட்போன்’ வீசிய சம்பவம் : தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இடைநீக்கம்

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபையில் நேற்று முன்தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் கவர்னர் நரசிம்மன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும்அமளியில் ஈடுபட்டனர். கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, பதாகைகளையும் வைத்திருந்தனர். இருப்பினும் கவர்னர் தொடர்ந்து தனது பட்ஜெட் உரையை படித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மீது ‘ஹெட்போனை’ வீசி எறிந்தனர்.

ஆனால் அந்த ‘ஹெட்போன்’ கவர்னர் மீது விழாமல் அருகில் இருந்த கவுன்சில் சேர்மன் சுவாமி கவுடு மீது விழுந்தது. இதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. உடனே சபை காவலர்கள் கவர்னரை சுற்றி நின்று பாதுகாத்தனர். காயம் அடைந்த சுவாமி கவுடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித்தலைவர் ஜனா ரெட்டி உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க இயலாது.

இதேபோல் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.